இராமர் பிள்ளை! இவரைத் கேள்விப்படாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. அதே சமயம் இவரின் கண்டுபிடிப்பான மூலிகை எரிபொருள் உண்மையா? நம்பகமானதா? என்று குழம்பாதவர்களும் யாரும் இருக்க முடியாது. மீண்டும் களம் இறங்கியிருக்கிறார் இராமர்பிள்ளை. 11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராமர் பிள்ளை! இவரைத் கேள்விப்படாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. அதே சமயம் இவரின் கண்டுபிடிப்பான மூலிகை எரிபொருள் உண்மையா? நம்பகமானதா? என்று குழம்பாதவர்களும் யாரும் இருக்க முடியாது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் இந்த இராமர் பிள்ளை. இவர் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் அவை, நடுவண் அரசின் கூட்டு திட்டத்தில் மூலிகை பெட்ரோலை பதிவு செய்துள்ளதாக இராமர் பிள்ளை தெரிவிக்க, கடந்த மூன்று கிழமைகளாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், செய்தி வெளியாகி, கொஞ்சம் கொஞ்சமாக விளம்பரம் பெற்று வருகிறது. நாளது 15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று முதல் (29.01.2020) மூலிகைப் எரிபொருள் விற்பனையை தொடங்கியுள்ளார். தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட விற்பனை முகவர்களை அறிமுகப்படுத்தும் விழா இராஜபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அவர் பேசுகையில் வியாழக்கிழமை முதல் மூலிகை எரிபொருள் நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ 30-க்கு என அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே ஒரு பகுதியில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மூலிகை எரிபொருள் தயாரிக்கும் வகையில் தொழிற்சாலை தயாராகவுள்ளது. கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்படும் இந்த மாற்று எரிப்பொருளை தயாரிக்க எந்தவிதமான தடையும் விதிக்கக் கூடாது என உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 21 ஆண்டுகளாக இந்த முயற்சியில் போராடி வருகிறேன். 500 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் அளவு மூலப் பொருள்களை சேமித்து வைத்துள்ளேன். வேளாண் முறையில் மூலிகையை விளைவிக்கும் முயற்சி நடந்து வருகிறது. உலக காப்புரிமை பெறுவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. நான் நேரடியாக விற்பனை செய்யும் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 20, டீசல் ரூ 24-க்கு விற்பனை செய்யவுள்ளேன் என தெரிவித்தார். கழிவுநீரின் மூலம் இதை உற்பத்தி செய்து வருகிறோம். இந்த பெட்ரோல் மூலம் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஒரு லிட்டருக்கு, இரண்டு சக்கர வாகனங்கள் 80 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யலாம் என இராமர் பிள்ளை கூறியுள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இராமர் பிள்ளை. இடையில் நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை கைது. மூன்றாண்டுகள் தண்டனை என்ற செய்திகளையெல்லாம் தாண்டி வந்து மீண்டும் மூலிகை பெட்ரோல் பரபரப்பை கிளப்பியுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை? எந்த அளவிற்கு சாத்தியம்? என்று மக்களால் மட்டுமல்ல ஊடகங்களாலும் நம்பி உறுதியாக செய்தியை முன்னெடுக்க முடியாத நிலை தொடரத்தான் செய்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



