Show all

தனியார் மருத்துவமனையின் அடாவடி! கொரோனாவால் இறந்தவர் உடலை கொடுக்க ரூ11 லட்சம் கேட்டது

கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார் மருத்துவமனை, பதினோரு லட்சம் கேட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில், கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார் மருத்துவமனை, பதினோரு லட்சம் கேட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 55 அகவை அன்பழகன், இருபது நாட்களுக்கு முன்பு கொரோனா மற்றும்  மூச்சுத்திணறலால் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடக்கத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்தை செலுத்தினால், குணமாகும் என மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர். உடனடியாக உறவினர்கள் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கட்டியுள்ளனர். 

இதனையடுத்து கடந்த கிழமை மூன்று லட்ச ரூபாய் பணம் செலுத்தி உள்ளனர். அப்படி இருந்தும், நேற்று இரவு அன்பழகன்  உயிரிழந்து விட்டதாக  மருத்துவர்கள் கூறியுள்ளனர். 20 நாட்களாக சிகிச்சை அளித்ததற்கு  ஏழு லட்ச ரூபாய் மீதி பணம் கட்டினால் மட்டுமே உடலை தருவோம் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வேறுவழியில்லாமல், அன்பழகன் உடலை மருத்துவமனை நிர்வாகம், சடுதிவண்டி மூலம் காசிமேடு  மயானத்திற்கு அனுப்பி வைத்து அடக்கம் செய்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.