06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து பேசி காணொளி வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழர்களை தீவிரவாதியாக்க முயற்சிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இது தற்செயலாக நடந்தது போன்று இல்லை. முற்றிலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது போன்று உள்ளது. இங்கு இன்னும் ஒரு ஈழம் உருவாகிவிடக் கூடாது என்று காணொளியில் கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது பாஜகவினர் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து சின்னத்திரை நடிகை நிலானி மீது நான்கு பிரிவுகளின் கீழ் கடந்த மாதமே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகை நிலானியை வடபழனி காவல்துறையினர் குன்னூரில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த அவரை கைது செய்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,824.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



