Show all

சுற்றுலா பயணிகளைக் கவரும் அப்துல்கலாம் மணிமண்டபம்

முன்னாள் குடிஅரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவிடம் ராமேசுவரம் அருகே பேய்கரும்பு பகுதியில் உள்ளது.

மணிமண்டபத்தில் அப்துல் கலாமின் சாதனைகள், அவருடைய அரிய புகைப்படங்கள், வீணை வாசிப்பது போன்ற சிலை மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதனை நாள்தோறும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.

ராமேசுவரம் கோவிலுக்கு வரும் வடமாநில பக்தர்கள் அப்துல்கலாம் மணிமண்டபத்தை தவறாமல் வந்து பார்த்து செல்கின்றனர்.

பொதுமக்கள் மணி மண்டபத்தை பார்வையிட அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமேசுவரம் கோவிலில் இருந்து பஸ் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் தனுஷ்கோடி, அப்துல் கலாம் மணிமண்டபம் போன்ற இடங்களை பார்வையிட்டனர். கடந்த 4 நாட்களில் மட்டும் அப்துல் கலாம் மணிமண்டபத்தை 1½ லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.