03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் முதல்வரும் அமைச்சர்களும் ஏன் பங்கேற்கவில்லை என சிலர் கேட்கின்றனர். செயலலிதாவின் இறுதிச் சடங்கில் ஸ்டாலின் கலந்து கொண்டாரா. அவர் ஏன் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். செயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிச்சாமியின் உள்ளே புகுந்து பணியாற்றுகிறதோ என்ற சந்தேகம் மூத்த அமைச்சர்களுக்கும் உண்டு என்று அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்தார். தமிழக முதல்வரை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுகின்றன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இப்படி பொதுக்கூட்டம் முடியும் வரை சரவெடிகளாக பகடிகளை ஆள்ளி வீசினார்கள் அதிமுக அமைச்சர் பெருமக்கள். புத்தர் சிரிக்கப் போகிறார்! இருக்கிடி உங்களுக்கு அணுகுண்டு வெடி என்று மக்கள் அமைதியாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,884.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



