Show all

தமிழகத்தையே அதிரவைக்கும் நிழற்படம்! கள்ள ரூபாய்தாள் கும்பலுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை, வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர், சுந்தர் மற்றும் கிதர் முகமது ஆகியோருடன் இணைந்து, வண்ண நகல் எந்திரத்தின் மூலம், கோடிக்கணக்கான புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்களை அச்சிட்டு வந்துள்ளார். காவல்துறையின் வாகனத் தணிக்கையின்போது கள்ள ரூபாய்தாள் விவகாரம் வெளியில் வந்தது. இதையடுத்து, ஆனந்த் மற்றும் கிதர் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கள்ள ரூபாய்தாள் அச்சடிப்பதற்காகப் பயன்படுத்திய அலுவலகத்தில் இருந்து, 1,18,00,000ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள ரூபாய்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹவாலா வலைப்பின்னல் மூலம், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்களைக் குறிவைத்து 2 ஆயிரம் ரூபாய் தாள்களை அச்சிட்டு வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்தக் கள்ள ரூபாய்தாள் கும்பலின் தலைவனான சுந்தர், நேற்று கோவை அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துள்ள படம் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில், கடந்த ஆண்டு ஆதியோகி சிலையை திறந்து வைப்பதற்காக, இந்தியத் தலைமை அமைச்சர் மோடி வந்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் கோவை விநியோகஸ்தர் ஆத்மா சிவக்குமார் மூலம், முதல்வரைச் சந்தித்துள்ளார் ஆனந்த். இதனால், கள்ளரூபாய்தாள் வழக்கு முறையாக நடக்குமா என்ற ஐயம் பொதுமக்கள் நடுவே எழுந்துள்ளது. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், இந்த நிழற்;படம் தற்செயலானதாகக் கூட இருக்கலாம். ஆனாலும்; அவர் பதவியைத் துறந்து விசாரணையை எதிர் கொள்ள வேண்டும். அரசு ஓட்டுனர் கூட விபத்து வழக்கை வெற்றிகரமாக முடித்தால்தான் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறார். 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,811. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.