Show all

புரிந்துகொள்வோம்- பின்பற்றுவோம்! அடிக்கடி முறையாக கைகழுவுதல் கொரோனாவிற்கு எதிரான ஐம்பது விழுக்காட்டு பாதுகாப்பைத் தரும்

சென்னையில் மட்டும் ஏன் இத்தனை கொரோனா அதிகரிப்பு என்பதற்கு குறைவான தண்ணீர் பயன்பாடு என்கிற விடை நமக்கு நெற்றியில் அடித்தாற் போல் கிடைத்து விடுகிறது. கோயம்போட்டில்தாம் சென்னைக் கொரோனாவின் தொடக்கமாம். கோயம்பேட்டில் குடிக்கவே தண்ணீர் கிடைக்காது. கொரோனா தான் பரவ தேர்ந்தெடுத்த மிகச் சிறந்த தண்ணீர் பற்றாக்குறைப் பகுதி கோயம்போடு. சரிதான். 

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: மனிதர்களுக்குக் கொரோனா பரப்புதலில் அவரவர்கள் கைதான் முதன்மையான பங்கு வகிக்கிறது என்பது இயல்அறிவர்கள் (சயின்டிஸ்ட்) தெரிவிக்கும் ஆணித்தரமான உண்மை. அதனால் கையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அடிக்கடி கையை சோப்பு போட்டுக் கழுவவேண்டும். என்கிற நடவடிக்கை கொரோனாவிற்கு எதிரான ஐம்பது விழுக்காட்டு வெற்றிகரமான நடவடிக்கையாகும்.

சென்னையின் அதிகப்படியான கொரோனாவிற்கு காரணம்:- சகட்டு மேனிக்கு அதிக இடங்களில் புழங்கும் பழக்கமுள்ள சென்னை மக்களின் குறைவான தண்ணீர் பயன்பாடு காரணமே என்பதை நாம் அடித்துக் கூறிவிடலாம். சீசாக்களிலும், குடுவைகளிலும் தண்ணீரைப் பயன்படுத்தி வரும் சென்னை மக்களின் கை கழுவுவதிலும், குளிப்பதிலுமான குறைவான தண்ணீர் பயன்பாடு காரணமே அதிகப்படியான கொரோனா பரவலுக்கு காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும். 

மனிதர்களுக்குக் கொரோனா பரப்புதலில் அவரவர்கள் கைதான் முதன்மையான பங்கு வகிக்கிறது என்கிற இயல்அறிவர்களின் கருத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதாம் சென்னையில் மட்டும் ஏன் இத்தனை கொரோனா அதிகரிப்பு என்பதற்கு குறைவான தண்ணீர் பயன்பாடு என்கிற விடை நமக்கு நெற்றியில் அடித்தாற் போல் கிடைத்து விடுகிறது.  

அரசும், வசதி வாய்ப்புள்ளவர்களும் சென்னை மக்களுக்கு தாராளமான தண்ணீர் கொடை அளித்தால் மட்டுமே சென்னையிலிருந்து கொரோனாவை விரட்டியடிக்க முடியும்.  

ஆனாலும், யாரும் நமக்கு உதவா விட்டாலும், சென்னை மக்கள் நாமாக அடிக்கடி கைகழுவுவதற்கு கொஞ்சம் கூடுதல் நேரத்தையும் பொருளையும் செலவு செய்வோம். அடிக்கடி முறையாக கைகழுவுதல் கொரோனாவிற்கு எதிரான ஐம்பது விழுக்காட்டு பாதுகாப்பைத் தரும் என்பதைப் புரிந்துகொள்வோம்- பின்பற்றுவோம்!

நான் வீட்டிலேயேதானே இருக்கிறேன். நானும் அடிக்கடி கைகழுவ வேண்டுமா என்று கேட்காதீர்கள். ஒவ்வொரு சின்ன சின்ன வேலை முடிந்தவுடன் கையை கழுவுகிற நடவடிக்;கை நமக்கு கொரோனாவிடமிருந்து உறுதியாக உயரிய பாதுகாப்பை வழங்கும். எந்த யோசனையும் வேண்டாம். சென்னை மக்கள் தண்ணீருக்கு கொஞ்சம் கூடுதல் செலவு செய்யுங்கள்.

கொரோனா நுண்நச்சு பரவலைத் தடுக்க, ஒவ்வொருவரும் அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் முதன்மைத்துவம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

நமது பயன்பாட்டில் உள்ள எந்த ஒரு சோப்பும் நுண்நச்சுகளுக்கு எதிரானவைகள்தாம். கொரோனா நுண்நச்சின் வெளிப்புறம் புரதம் மற்றும் கொழுப்பால் ஆனது.

இதனால் கைகளில் மிக எளிதாக பிடித்துக்கொள்ளும். வெறும் நீரால் தூய்மைப்படுத்துவது என்பது புரதம் மற்றும் கொழுப்பை ஒன்றும் செய்யாது, நீரில் எண்ணெய் ஊற்றினால், அது தண்ணீருடன் கலக்காது மாறாக மிதக்கும், ஆனால் அதனுடன் சோப்பை சேர்த்தால். நீருடன் கலக்கும்.

சோப்பில் இரண்டு மூலக்கூறுகள் உள்ளன. ஒன்று நீருடனும் மற்றொன்று எண்ணெயுடனும் கலக்கும். இதன் மூலம் தண்ணீரில் இருக்கும் கொழுப்பை சோப் இழுக்கும். புரதம் மற்றும் கொழுப்பால் சூழப்பட்ட கொரோனா நுண்நச்சு, மீது சோப்பு படும்போது அவை இரண்டும் தனியாக பிரிந்து நுண்நச்சு உடைப்படும்.

ஆனால் இது நடைபெற குறைந்தது 20 வினாடிகள் பிடிக்கும். 5 விநாடிகளோ, பத்து விநாடிகளோ மட்டும் கைகளை கழுவும் போது நுண்நச்சு அங்கேயே தங்கி விடும். சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுவது தான் சிறந்தது என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் கூறுகிறது. எனவே சோப்பை பயன்படுத்தி 20 நொடிகளுக்கு மேல் கைகளை கழுவி கொரோனா நுண்நச்சுப் பரவலை தடுப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.