11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 99 போராடி 100வது நாளில் ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 70பேர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த போராட்டத்தால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அரசுக்கு 5 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. 1. மே 22ல் நடந்த துப்பாக்கிச் சூடு தடியடி குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தன்னிட்சையாக விசாரிக்க வேண்டும் (தற்போது தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் வழக்கை விசாரணைக்கு எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கவனஅறிக்கை அனுப்பியுள்ளது) 2. சாமானிய மக்களுடைய வாழ்வைப் பாதித்து பலருடைய உயிரைக் குடித்த நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். 3. திட்டமிட்ட இந்தப் படுகொலைக்கு தனது பொறுப்பற்ற போக்குக்கு துணை நின்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் மீதும் காவல்துறை சீருடை அணியாமல் மஞ்சள் நிற டி சர்ட் அணிந்து அப்பாவி மக்களை நெஞ்சிலும் தலையிலும் துப்பாக்கியால் சுடுவதற்குப் பின்னணியில் காரணமாக இருந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் மீதும் 302 ஐ.பி.சி. சட்டப் பிரிவின்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு சமூகநீதி அடிப்படையில் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் உள்ள ஒருவருக்கு அரசு தரப்பில் வேலை கொடுக்க வேண்டும். 5. துப்பாக்கிச் சூடு, தடியடியில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். இதுவரை ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து அவர்களின் பாதிப்புக்கு ஏற்ப நீதி அடிப்படையில் இழப்பீடு கொடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, தமிழின அழிப்பு மாதத்தில், தமிழர் உரிமை போராட்டங்களை இப்படி நசுக்க முடியுமா என்கிற ஒரு ஒத்திகையை, தமிழ் விரோத (ஆரிய) சக்திகளுக்காக நடத்தி முடித்திருக்கிறது. இந்த சோரங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது யாரால் என்பதை தமிழர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளும் போதுதாம் நிலையான தீர்வை எட்டுவர். இப்போதைக்கு இந்த தற்காலிக தீர்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்கட்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,798.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



