வடஇந்தியர்களின் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த போதும், தமிழ் அடையாளத்தை தூக்கிப்பிடித்து களமிறங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் நல்லாட்சிக்கான தூண்டுகோளாக ஏற்றுக் கொண்டு, சோறு போட்டு தமிழையும், தமிழ்வழிக் கல்வியையும் வாழ்வித்த மாமனிதர் காமராசர் நினைவைப் போற்றுவோம். 16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்றைக்கு வடஇந்தியர்களின் தலைமையில் இயங்கும் பாரதிய ஜனதா கட்சியின், தமிழகத் தலைவர்கள், நம்மை ஹிந்திக்கும் ஹிந்துத்துவாவிற்கும் அடிமையாக்க முயலும் நிலையில், தமிழர்கள்- தமிழையும் நமது பண்பாட்டையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய விளிம்பு நிலைக்குத் தள்ளப் பட்டு அல்லாடி வருகிறோம். ஆனால், வடஇந்தியர்களின் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த போதும், தமிழ் அடையாளத்தைத் தூக்கிப்பிடித்து களமிறங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தன் நல்லாட்சிக்கான தூண்டுகோளாக ஏற்றுக் கொண்டு, சோறு போட்டு தமிழையும், தமிழ்வழிக் கல்வியையும் வாழ்வித்த மாமனிதர் காமராசர் நினைவைக் கொண்டாடும் நேரத்தில்- இன்றைக்கு வடஇந்தியர்களின் தலைமையில் இயங்கும் பாரதிய ஜனதா கட்சியின், தமிழகத் தலைவர்கள், நம்மை ஹிந்திக்கும் ஹிந்துத்துவாவிற்கும் அடிமையாக்க முயலும் நிலையை தகர்த்தெறிய சூளுரை ஏற்போம். காமராசர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் குறிப்பிடத்தக்க இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு திராவிட முன்னேற்றக் கழக ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. “திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன்" என்கிற நிபந்தனைகளுக்கு எழுதி கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும் காமராசர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். காமராசரின் மறைவுக்கு பின், 44 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரித்தானிய அரசு உப்பு எடுக்கும் தொழிலுக்கு விதித்த வரிக்கு எதிராக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை முன்னெடுத்தது. அந்த வகையில் ராசாசியின் தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு எடுக்கும் போராட்டம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார் காமராசர். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார். இந்திய விடுதலைக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் காமராசர். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் இந்திய விடுதலைக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்றார். காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். இந்திய விடுதலைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா விடுதலை அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார். காமராசர் தன் ஆட்சி காலத்தில், முதலாவதாக இராசகோபாலாச்சாரி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. திராவிட முன்னேற்றக் கழகத்தை தனது நல்லாட்சிக்கு துண்டுகோளாக ஏற்றுக் கொண்ட காமராசர், இந்திய விடுதலைக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடி கட்சியான நீதிக்கட்சி, பிரித்தானிய அரசின் ஒப்புதலோடு, சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்திருந்தது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே அறுபது ஆண்டுகளுக்கு முன்பு காமராசரால் மதிய உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது எம்.ஜி.ராமச்சந்திரனால் நாற்பது ஆண்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும். காமராசரின் மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 10 முதன்மை நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி கழிமுக விரிவாக்கத் திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், சாத்தனூர், கிருட்டிணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் சிக்கலைத் தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது. பாரத மிகு மின் நிறுவனம் காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மதிய உறக்கத்திற்குப் பின்னர் காமராசரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது.
அறுபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு, காமராசர் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நேரத்தில் முதல்வர் பதவிக்கு சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டார். முதல்வர் பதவிக்கு சுப்பிரமணியம் பெயரை பக்தவத்சலமே முன்மொழிந்தார். தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றார். இதனால் சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் திகைத்துப்போனார்கள். தனது செயலுக்காக காமராஜரிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் பக்தவத்சலம். இந்த நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியத்தையும், அவரை ஆதரித்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார் காமராசர்.
காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார் காமராசர். தன்னுடைய 16ஆம் அகவையில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்
தொடர்வண்டிப் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் அனல் மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



