தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். 10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். மக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை; நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. பருவமழை தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 200 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள், 600 மோட்டார் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



