Show all

முதல் டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்ரிக்கா

இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3  இருவது ஒவர் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க சென்றுள்ளது.  அதன்படி இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, முதல் இன்னிங்சில் 73.1 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். புவனேஷ்வர்குமார் தனது முதல் மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

அதன் பிறகு ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 209 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகியது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டயா மட்டுமே 95 பந்துகளில் 93 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 77 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்ரிக்க அணி இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்து ஆடி வந்தது. மூன்றாம் நாளான நேற்று மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.

அதை தொடர்ந்து இன்று ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் அதிரடியால் 130 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி  தரப்பில் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார், பாண்டயா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.  

அதை தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியும் அதிக ரன் சேர்க்க முடியாத அளவு தென் ஆப்பிரிக்காவும் சிறப்பாக பந்து வீசியது. இறுதியாக இந்திய அணி வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்து அணைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 37  ரன்கள் குவித்தார். இதன் மூல தென் ஆப்பிரிக்க அணி  72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடரை 1-0  என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.