U -19 உலகக்கோப்பை அரை இறுதி கிரிக்கெட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்தியா ! ஆம் தற்போது 19 வயத்துக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நியூசிலாந்தில் U -19 ஒரு நாள் உலக கோப்பை அரை இறுதிப்போட்டியில் இந்தியாவும் , பாகிஸ்தானும் விளையாடி வருகிறது . டாசில் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய பிரிதிவி சா மற்றும் மனோஜ் களத்ரா 41 மற்றும் 47 ரன்கள் சேர்த்து ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். மூன்றாவதாக, களம் இறங்கிய சுபான் கில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் பந்தை நார் நாராக பிரித்தெடுத்தார். தன்னை அவுட் செய்ய ஆளின்றி 94 பந்துகளில் 102 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார். இதன் மூலம் இந்தியா 272 ரன் என்ற இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. இதுவரை இந்த U -19 உலகக்கோப்பை போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடிய சுபான் கில் இதுவரை மொத்தம் 1107 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 7 முறை 50 ரன்கள் , 4 முறை 100 ரன்கள் அடித்துள்ளார். தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தொடர்ச்சியாக 50 க்கு மேல் ரன் அடித்த முதல் U -19 பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபான் கில். இவர் பங்களாதேசுடனான காலிறுதி போட்டியில் 94 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ 1.8 கோடி விலையில் ஏலம் எடுத்துள்ளது. ஒரு நாள் போட்டியில் ஒரு காட்டு காட்டிய சுபான் கில் IPL T20 போட்டியிலும் ஒரு காட்டு காட்டுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம். இதையடுத்தது , களமிறங்கிய பாகிஸ்தான் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்தை வீசு வீசு என்று வீச , பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களும் பதிலுக்கு பேட்டை வீச வெறும் காற்று மட்டுமே வந்தது. 69 ரன்களில் பாகிஸ்தான் கதையை முடித்தது இந்தியா . அப்புறம் என்ன 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுவிட்டது. சிறப்பாக விளையாடிய சுபான் கில்லுக்கு "பிளேயர் ஆப் தி மேட்ச்" பட்டம் கிடைத்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



