சமீபத்தில் நடைபெற்ற U-19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதற்க்காக அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் ரூபாயும், வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாயும், இதர பணியாளர்களுக்கு 20 லட்சம் ரூபாயும் பரிசாக அறிவித்தது பிசிசிஐ. அணியில் ஓவொரு உதவியாளர்கள் மற்றும் வீரர்களும் தங்களது முழு பங்களிப்பையும் கொடுத்துள்ள நிலையில் எனக்கு மட்டும் அதிகமாக பரிசு அறிவித்திருப்பது வருத்தமளிப்பதாகவும், அனைவருக்கும் ஒரே மாதிரி பரிசு அளித்திருக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக தனக்கு வருத்தத்தையும் கோரிக்கையையும் பிசிசிஐ இடம் தெரிவித்திருப்பதாக ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ராகுல் டிராவிட் கிரிக்கெட் போட்டிகளில் கூட மிகவும் நியாயமாகவும் பெருந்தன்மையாகவும் நடந்து கொள்வார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மனிதர் வாழ்க்கையிலும் இவ்வளவு நியாயமாக இருப்பார் என்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



