இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஒலிம்பிக் பதக்க மங்கை பி.வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் மோதினர். மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய பிவி சிந்து 21-16 மற்றும் 22-20 என்ற நேர் செட்களில் சாய்னாவை வீழத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவின் சுங் ஜி ஹியூனை எதிர்கொள்கிறார் பிவி சிந்து.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



