Show all

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதல் ஒரு நாள் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதையடுத்து, முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 125 பந்துகளில் 121 ரன்களும் தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் குவித்தனர். இது கோலியின் 200-வது என்பதும் பாண்டிங்கின் சாதனையை முறியடித்து ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் (31-வது சதம்) அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து சார்பில் பவுல்ட் 4, டிம் சவுத்தீ 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் காலின் மன்ரோ முறையே 32 மற்றும் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அனால் ராஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம்சிறப்பாக விளையாடியதால் நியூசிலாந்து அணி 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லதாம் 103 ரன்களும் ராஸ் டெய்லர் 95 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் பும்ரா, குல்தீப், பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.