Show all

ஆசியக் கோப்பை ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசிய அணிகள் மோதின. இப்போட்டியில் மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இறுதிப்போட்டியில் முதல் பாதியில் மூன்றாவது நிமிடத்தில் ராமன்தீப் சிங்கும் 29-வது நிமிடத்தில் லலித் உபத்யாயும் தலா ஒரு கோல்களை அடித்தனர். மலேசியா முதல் பாதியில் எந்த கோலும் அடிக்க வில்லை. இரண்டாம் பாதியின் போது, ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் மலேசியாவின் ஷாரில் சாபா முதல் கோலை அடித்தார். பிறகு எவரும் கோல் அடிக்கவில்லை என்பதால் இறுதியாக இந்திய அணி  2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

ஆசியக்கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி  2003, 2007-ம் ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.