விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகள் வருட வருடம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் அர்ஜூனா விருதுக்கு 17 பேரை ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சி.கே. தக்கர் தலைமையில் குழு இன்று பரிந்துரை செய்தது. இதில் கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் கிரிக்கெட் வீரர் புஜாரா பெயரும் இடம்பெற்றுள்ளது. அர்ஜூனா விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள 17 பேர் கொண்ட வீரர்கள்- வீராங்கனைகள் விவரம்:- 1. வி.ஜே. சுரேகா (வில்லித்தை),
2. குஷ்பிர் கவுர் (தடகளம்),
3. அரோகின் ராஜீவ் (தடகளம்),
4. பிரசாந்தி சிங் (கூடைப்பந்து),
5. எல். தேவேந்த்ரோ சிங் (குத்துச்சண்டை).
6. புஜாரா (கிரிக்கெட்).
7. ஹர்மன்ப்ரீத் கவுர் (கிரிக்கெட்),
8. ஆயினம் பெம்பெம் தேவி (கால்பந்து).
9. எஸ்.எஸ்.பி. சவ்ராசியா (கோல்ஃப்).
10. எஸ்.வி. சுனில் (ஹாக்கி).
11. ஜேஸ்விர் சிங் (கபடி).
12. பி.என். பிரகாஷ் (துப்பாக்கி சுடுதல்).
13. ஏ. அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்),
14. சாஹேத் மைனேனி (டென்னிஸ்),
15. சத்யவார்த் கடியன் (மல்யுத்தம்),
16. மாரியப்பன் தங்கவேலு (பாராலிம்பிக்).
17. வருண் பதி (பாராலிம்பிக்)
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



