இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கொழும்புவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ராகுலும் தவனும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய தவன், 35 ரன்களில் பெரேரா பந்துவீச்சில் அவுட்டானார். பின்னர் துரதிர்ஷ்டவசமாக ராகுல் 57 ரன்களிலும், கோஹ்லி 13 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பிறகு ஜோடி சேர்ந்த புஜாரா - ரஹானா ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புடன் விளையாடினார்கள். முதல் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து வலுவான நிலையிலுள்ளது. புஜாரா 128, ரஹானே 103 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். புஜாரா 84-வது இன்னிங்ஸில் 4000 ரன்களைக் கடந்து டிராவிட் சாதனையை சமன் செய்தார். சுனில் கவாஸ்கர் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் 81 இன்னிங்ஸில் 4000 ரன்களைக் கடந்து இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



