Show all

ஐ.பி.எல் சீசன் 10 : புனேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற மும்பை முதலில் பேட் செய்தது. சிம்மன்ஸ், பார்திவ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். உனத்காட் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் பார்திவ் (4 ரன்), 4வது பந்தில் சிம்மன்ஸ் (3 ரன்) அடுத்தடுத்து வெளியேற, மும்பை தடுமாறியது. அடுத்த வந்த வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களில் நடையை கட்ட ரோகித் அதிகபட்சமாக 24 ரன்களும் குருனல் 47 ரன்களும் குவித்தனர். மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. புனே பந்துவீச்சில் உனத்காட், ஸம்பா, கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

அடுத்து ஆடிய புனே அணியின் ரஹானே, திரிபாதி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் 3-வது ஓவரில் புனே அணி 17 ரன்களை எடுத்த நிலையில் திரிபாதி விக்கெட்டை பறிகொடுத்தது. இதையடுத்து ஸ்மித் களமிறங்கினார். ஸ்மித்தும் ரஹானேவும் நிலைத்து விளையாடினர். அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 44 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த  தோனி 10 ரன்களில் ஆட்டமிழந்ததால் மேட்ச் டென்ஷன் ஆனது. இறுதியாக 2 ஓவர்களில் 23 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை புனேவுக்கு ஏற்பட்டது. அந்த ஓவரில் 12 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது.

கடைசி ஓவரை ஜான்சன் வீசினார். இந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் விழுந்ததால் கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை புனேவுக்கு ஏற்பட்டது. ஆனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் போராடி வென்று ஐபிஎல் கோப்பையை 3வது முறையாக கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு 15 கோடியும், 2வது இடம் பிடித்த புனே அணிக்கு 10 கோடியும் வழங்கப்பட்டது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.