Show all

4 பந்துகளில் 92 ரன்கள் வாரி வழங்கிய வள்ளல் பௌலர்

வங்கதேசத்தில், டாக்கா செகண்ட் டிவிசன் லீக் என்ற பெயரில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று லல்மாடியா கிளப் மற்றும் அக்ஜியோம் கிரிக்கெட்டர்ஸ் அணிகள் நடுவே போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் தான் இந்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

முதலில் பேட் செய்த லல்மாடியா கிளப் அணி 14 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதற்கு காரணம், நடுவர்கள் வெண்டுமென்றே இந்த லீக் முழுக்கவே இப்படித்தான் தங்கள் அணிக்கு எதிராக நடுவர்கள் திட்டமிட்டு நடந்து கொள்வதாக கருதியது அந்த அணி.

 

இதையடுத்து நடுவர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க அக்ஜியோம் கிரிக்கெட்டர்ஸ் அணி பேட் செய்ய வந்தபோது வேண்டுமென்றே, 13 வைடுகள், 3 நோபால்களை வீசினர். இவை அனைத்தும் பௌண்டரிக்கு சென்றது. கீப்பர் எதையுமே பிடிக்கவில்லை. இதனால் வெறும் 4 பந்துகளிலேயே 92 ரன்களை குவித்தது க்ஜியோம் கிரிக்கெட்டர்ஸ் அணி வெற்றிபெற்றது. தாங்கள் வேண்டுமென்றே இப்படி செய்ததாக லல்மாடியா அணி அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.