Show all

டெஸ்ட் ஆல் ரவுண்டர் மற்றும் பந்து வீச்சு தரவரிசையில் அஷ்வின் முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசை ஆல் ரவுண்டர்கள் மற்றும்ப பந்து வீச்சாளர்கள் ட்டியலில், இந்தியாவின் அஷ்வின் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

 

ஐசிசி நேற்று வெளியிட்ட ஆல் ரவுண்டர்கள் ரேங்கிங் பட்டியலில் அஷ்வின் ஒரு இடம் முன்னேறி 434 புள்ளிகளுடன் நம்பர் 1 அந்தஸ்தை மீண்டும் கைப்பற்றி உள்ளார். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் (403), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (360) அடுத்த இடங்களை பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (847) ஒரு இடம் பின் தங்கி 4வது இடத்தில் உள்ளார். ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.