Show all

யோகி ஆதித்யநாத்துக்கு தொடங்கியது அடுத்த ஏழரை! பாதுகாப்பு வண்டியில் சிறுவன் பலி

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இணை அமைச்சராக இருந்து வருபவர் ஓம்பிரகாஷ் ராஜ்பர். இவர் நேற்று இரவு தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன், கலோனல்கஞ்ச் - பரஸ்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற 8 அகவை சிறுவன் மீது அமைச்;சரின் பாதுகாப்பு வாகனம் மோதியது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடித்து அவனது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்து தொடர்பாக சிறுவனது தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் மந்திரி ராஜ்பர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தன்மீது கூறப்படும் புகாரை ராஜ்பர் மறுத்துள்ளார். எந்த கார் இடித்தது எனபதை கண்டறிந்து, குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்கவும் வலியுறுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்து தொடர்பாக காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.