Show all

இந்தியாவில், அடுத்த ஆறுமாதத்திற்கு பின்பு அன்றாடம் 2.87 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அபாயம்- ஒரு நிறுவனத்தின் அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

இந்தியாவில் அடுத்த ஆறாவது மாதத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.87 லட்சமாக இருக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. நடுவண் அரசு, கொரோனா தடுப்புப் பணிகளில், தனது சட்டாம்பிள்ளை வேலைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, அதிகாரிகளை நேரடியாக கொரோனா தடுப்புப் பணிகளுக்குக் களம் இறக்கினால் வெல்லலாம். 

24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் அடுத்த ஆறாவது மாதத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.87 லட்சமாக இருக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தற்போதைய பரிசோதனைகள் நிலவரம், கடந்த கிழமை முதல் பரிசோதனைகளை அதிகரித்திருப்பது உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போதைய நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்காமல் போனால் உலகிலேயே இந்தியாதான் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்படும் நாடாக இருக்கும்.

84 நாடுகளின் கொரோனா பாதிப்பு விவரங்களை ஆய்வு செய்ததில் இம்முடிவு தெரியவந்துள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் இந்தியாவில் அடுத்த ஆறாவது மாதத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது 2.87 லட்சமாக இருக்கும். அந்தக் காலகட்டங்களில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 20 கோடி முதல் 60 கோடி வரை உயரக் கூடும்.

இதே கால கட்டத்தில் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 95,000 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும். தென்னாப்பிரிக்காவில் நாள் ஒன்றுக்கு 21,000; ஈரானில் 17,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் நிலை உருவாகும். தற்போதைய நிலைமையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் 84 நாடுகளில் கொரோனா பாதிப்பு 155 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் இந்த நாடுகள் நாள் ஒன்றுக்கு 0.1விழுக்காடு என்ற அளவில் பரிசோதனைகளை அதிகரித்தால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 137 கோடியாக இருக்கும்.

முன்பே கணிக்கப் பட்ட தகவலின் அடிப்படையில் இன்றைய நாளில் உலக அளவில் கொரோனா பாதிப்பு 8.85 கோடியாகவும் கொரோனா மரணங்கள் 6 லட்சமாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. 

தற்போது கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் 11.8 கோடியாக இருக்கிறது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி, இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்? என்பதுதாம் சமூக ஆர்வலர்களின் கேள்வி. 

1. எல்லையில்லாத படுக்கை வசதிகள், எல்லையில்லாத பரிசோதனைகளை முன்மொழிகின்றார்கள் மருத்துவத் துறையினர்.
2. மது விற்பனைக் கடைகள், பொதுப் போக்குவரத்துக்கள், சுற்றலாதளங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கோயில்கள், இப்படி பொது மக்கள், வருகை பதிவு இல்லாமல் கூடுவதை, முற்றாக கால வரையரை இல்லாமல் முடக்க வேண்டும் என்று அறிய முடிகின்றது அனுபவங்களால். எதிர்கால தலைவர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற வேண்டும்.
3. தற்காலிக தடுப்பு மருந்தாக ஹோமியோபதியில் கொரோனா நுண்ணச்சு நோசோடை உருவாக்கி பயன்படுத்தலாம்.
4. பேருந்துகள் எல்லாம் இயங்காமல் வெட்டியாகத்தான் இருக்கின்றன. அனைத்து பேருந்துகளையும் தனிமைப் படுத்தப்படும் குடும்பத்தினருக்காக அந்தந்த ஊரில் உள்ள பூங்காக்களில், திடல்களில் நிறுத்தலாம்.
6. ஆறு மாத காலத்திற்கு பெரு நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களைத் தங்கள் நிறுவனத்தின் பொறுப்பிலேயே பேணவும், நிறுவனத்தை இயக்கவும் செய்யலாம். இப்படி நிறைய யோசித்து சரியானதாகத் தோன்றுகிற அனைத்தையும் அரசு செய்யலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.