Show all

நான்காவது பெண்ணை நினைத்து மருகுகிறார்கள் தமிழக மக்கள்! பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக 3 பெண்கள்

21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் எண்ணி 120 நாட்களில் முடிவடைகிறது. எனவே பாராளுமன்றத்துக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

கடந்த முறை மக்களவை தேர்தலில் பாஜக  282 தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த  பாராளுமன்ற தேர்தலில்  பாரதீய ஜனதா வெற்றிக்கு, மூன்று அரசியல் பெண் தலைவர்கள்  சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

அந்த 3 பெண் அரசியல் தலைவர்கள்: ஒருவர்  மேற்குவங்காள முதல்வர் மம்தா பான்ர்ஜி,  இரண்டாவது நபர் உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி,  மூன்றாவது நபர் நேரு குடும்பத்தைச்  சேர்ந்த பிரியங்கா காந்தி ஆவார். கடந்த முறை பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றிய உத்தரபிரதேசத்தில்  மாயாவதியும் பிரியங்காவும்  மையம் கொண்டு உள்ளனர்.   

முன்னாள் ஆசிரியையான  63 அகவையுள்ள மாயாவதி  சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளார். இவர்  தலைமைத்துவமாக இருக்கும்  தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தியாக இருக்கிறார்.

64 அகவையுள்ள மம்தா பானர்ஜி 2 முறை நடுவண் இருப்புப்பாதை துறை அமைச்சராக இருந்தவர். கடந்த மாதம் பாரதீய ஜனதாவுக்கு எதிராக 25 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை கூட்டி மிகப்பெரிய  ஒரு மாநாட்டை நடத்தி காட்டினார்.

3-வது தலைவர் பிரியங்காகாந்தி ஆவார். இவர் கிழக்கு உத்தரபிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கபட்டு உள்ளார். 47 அகவையுள்ள  பிரியங்கா காந்தி பொதுச்செயலாளர் என்ற பெரிய பொறுப்போடு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.  இந்தப் பகுதி சுமார் 40 பாராளுமன்ற தொகுதிகள் அடங்கியது ஆகும்.

உத்தரபிரதேசம் மட்டுமின்றி இந்தியா முழுவதும்  பிரியங்காகாந்தி கருத்துப் பரப்பதலில் ஈடுபட காங்கிரஸ் திட்டம் வைத்து உள்ளது. 

மோடி தனது ஐந்து ஆண்டு கால ஆட்சியில், சரக்கு-சேவை வரி, ஆதார், நீட், பணமதிப்பிழப்பு, என்று மக்களை அலைகழித்ததைத் தவிர மக்களுக்கு ஆதரவு நிலையில், இந்திய மக்கள் யாருக்கும் ஒரு ஆணியும் பிடுங்காத நிலையில், 

இந்த மூன்று பெண்கள் மோடியை வெச்சு செய்வார்கள் என்றே கருதப் படுகிறது. இந்த அருமையான சூழலில் செயலலிதா அவர்களும் இருந்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் என்று தமிழக மக்கள் எண்ணி மருகுகிறார்கள். 

குறைந்த பட்சம் இந்த பன்னீர் எட்டப்பனாக செயல்படாமல் இருந்திருந்தால் கூட நான்காவது பெண்ணாக மோடியை விரட்டிய பெருமையில், தமிழகத்திற்கும் உரிய பங்கை பெற்றுத் தந்திருப்பார் சசிகலா அவர்கள் என்கின்றனர் அதிமுக அடிமட்டத் தொண்டர்கள்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,052.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.