07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு அகவை நிறைவடைந்த ஆண் வாக்களிக்கவும் ராணுவத்தில் சேரவும் அனுமதிக்கப்படும்போது ஏன் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கக்கூடாது. தற்போது ஆணின் திருமண அகவை 21ஆக உள்ளது. இதை 18ஆக குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஒருவர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சஅறங்கூற்றுமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்குத் தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,950.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



