Show all

வாழ்த்த வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் மாப்பிள்ளை! வரதட்சணையாக மாமனாரிடம் பெற்று

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டம் பலபத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜ் காந்த பிஸ்வால். பள்ளி ஆசிரியரான இவர் இயற்கையை நேசிப்பவர். இவருக்கு கடந்த கிழமை திருமணம் நடந்தது.

இதுகுறித்து அவர் கூறும்போது, திருமணத்தின்போது மணமகனுக்கு மணமகள் வீட்டார் வரதட்சணை வழங்கும் முறையை நான் எதிர்க்கிறேன். நான் சிறு அகவையிலிருந்தே இயற்கையை நேசித்து வருகிறேன். எனவே, எனது திருமணத்துக்கு வரதட்சணை வேண்டாம் என்று சொல்லி விட்டேன். ஆனால், 1001 பழ மரக் கன்றுகளை திருமணப் பரிசாக வழங்க வேண்டும் என்று பெண்ணின் பெற்றோருக்கு நிபந்தனை விதித்தேன்.

இதை ஏற்றுக் கொண்ட அவர்கள் என் விருப்பப்படி மரக்கன்றுகளை வழங்கி உள்ளனர். எனது மனைவி ராஷ்மிரேகாவும் பள்ளி ஆசிரியையாக பணி புரிகிறார். வரதட்சணையை மறுத்து மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ள நான் எடுத்த முடிவால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என்றார்.

திருமணம் முடிந்த பிறகு, தன்னை வாழ்த்த வந்த விருந்தினர்கள் அனைவருக்கும் அந்த மரக்கன்றுகளை வழங்கினார் பிஸ்வால். இவரது இந்த முடிவை பலரும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,830.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.