நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டதை தொடர்ந்து, நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றனர். பல இடங்களில் 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை வழங்க சுங்கசாவடி ஊழியர்கள் மறுப்பதால், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. . கடந்த 8ம் தேதி இரவு ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு, பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதை தவிர்ப்பதற்காக சுங்க கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக டிசம்பர் 2ம் தேதிவரை ரத்து செய்யப்படுவதாக நடுவண் அரசு அறிவித்தது. நடுவண் அரசு அறிவித்த சுங்ககட்டணம் ரத்து நேற்று முன்தினம் இரவுடன் முடிவுக்கு வந்ததால், நாடு முழுவதும் 3 ஆயிரத்து 800; சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கியது. மேலும் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை சுங்கச்சாடிகளில் கட்டணத்திற்குச் செலுத்தலாம் என நடுவண் அரசு அறிவித்தது. நேற்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தொடங்கியதை அடுத்து நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டனர். ஒரு சில சுங்கச்சாவடிகளில் வாகனஓட்டிகள் 2000 ரூபாய் கொடுத்து கட்டணம் செலுத்தி அளித்தவர்களுக்கு, சில்லறையாக வழங்குமாறு சுங்கசாவடி ஊழியர்கள் கட்டாயபடுத்தியதில் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. பெருங்குடி சுங்கச்சாவடிகளில் சில்லறையாக வழங்குமாறு அறிவுறுத்திய ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளும் இடையே கைகலப்பு நடந்தது. இதேபோன்று சென்னையில் பணிபுரியம் செங்கல்பட்டு பகுதியில் வசிப்பவர்கள், செங்கல்பட்டு நெடுஞ்சாலை அருகே இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சென்னைக்கு வருவது வழக்கம். அப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களின் உதிரிபாகங்கள் திருடப்பட்டதாக செங்கல்பட்டு காவல்நிலையத்தில் வாகன உரிமையாளர்கள் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் அபாரதம் கட்டி இருசக்கர வாகனங்களை இளைஞர்கள் பெற்று சென்றனர். கடந்த 9-ம் தேதி முதல் நாடுமுழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், வாகனங்கள் வேகமாக பயணிக்க முடிந்தது. தற்போது மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கியதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த 1 முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேணடியுள்ளதாகவும், பழைய 500 ரூபாய் நோட்டுக்களை கட்டணமாக செலுத்தலாம் என நடுவண் அரசு தெரிவித்துள்ள போதிலும், சுங்கச்சாவடிகளில் பழைய ரூ.500 வாங்க மறுக்கின்றனர் என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



