15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநிலஇந்திய வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதவர்களிடமிருந்து, ரூ.1,771 கோடியை அபராதமாக வங்கி வசூலித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான மாநிலஇந்திய வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5,000 வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. இதன்படி பெருநகரங்களில் இருப்பவர்கள், தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5000-மும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000-மும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000-மும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000-மும் வைத்திருக்க வேண்டும். இந்நடைமுறை, 19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5118 முதல் (01.04.2017) அமலுக்கு வந்தது. இந்நிலையில் குறைந்த இருப்புத் தொகை வைத்திருக்காத பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் என்ற பெயரில் இதுவரை 1,771.77 கோடி ரூபாயை இந்தியமாநில வங்கி எடுத்திருப்பதாக நடுவண் அரசு நிதித்துறை இணை அமைச்சர் ஷிவ்பிரதாப் சுக்லா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை போணச் சொல்லுவதெல்லாம் சரிதான், போணதவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து அபராதம் என்ற பெயரில் அபகரிக்கும் தொகை அளவைக் குறைத்துக் கொள்ளலாம், அபராத வகையில் பொதுத் துறை வங்கிக்கு அத்தனை வருமானம் தேவையில்லை. குறைந்தபட்ச இருப்புத் தொகை பேணாத கணக்குகளிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு இவ்வளவு தொகை அபகரிக்கப் படும் என்று வங்கிகளில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்க நிர்பந்திக்கலாம். அபராத வகை வருமானம் எல்லாம் மக்களாட்சி நடைபெறுவதாக சொல்லப் படும் நாட்டின் தேசிய அவமானமே. இவ்வளவு தொகையை இழந்து பொதுமக்கள் அந்த வாங்கிகளில் கணக்கை தொடர வேண்டிய தேவை என்ன உள்ளது. பொது மக்கள் விழிப்புணர்வு பொற்றாக வேண்டும். குறைந்த பட்ச இருப்பு கோராத வங்கிகள் நிறைய உள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,652
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



