ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு, ஊழியர்கள் எழுதிய கடிதத்தில், ரூபாய் தாள் திரும்பப் பெறுதல் விவகாரத்தில், மோசமான நிர்வாகம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியில் தலையாய பதவியில் நிதித்துறை அமைச்சக ஊழியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் சட்ட மற்றும் நடைமுறை செயல்பாடுகள்
மீது அரசு தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் போக்கு, ரிசர்வ் வங்கியின் தனித்துவத்தை அவமதிக்கும்
செயலாகும். எனவே ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையை விட்டுக்
கொடுக்காது காக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நிதியமைச்சகம்
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் மீது தன்னை
திணித்துக் கொள்கிறது, இது நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் கூறியிருந்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



