15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இணையம், தொலைபேசி, தொலைக்காட்சி மூன்றையும் ஒரே கம்பிவடத்தில் வழங்கும் திட்டத்தை அந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவின் பைபர் கிரிட் திட்டம் முதல்கட்டமாக ஒரு லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படும் என்று ஆந்திர உட்கட்டமைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 55 கிராமங்களுக்கு பைபர் கிரிட் திட்டத்தின் கீழ் 100 விழுக்காடு இணைப்பு வழங்க திட்டமுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 149 ரூபாய் செலுத்தினால் போதும் மூன்று சேவையும் தடையின்றி அவர்களது வீட்டுக்கு வரப்போகிறது. வரும் புதன்கிழமை அன்று இத்திட்டத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைக்கவுள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகளுக்கு பைபர் கிரிட் திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 250தொலைக்காட்சிகளைப் பார்க்கமுடியும், தொலைப்பேசிக்கு வாடகை கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. இந்த திட்டம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகிறது என்கிறார் மூத்த அதிகாரி ஒருவர். இத்திட்டத்தை அமல்படுத்துவன் மூலம் இன்னோரு லாபமும் அரசுக்கு இருக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் கண்காணிப்பு படக்கருவிகளை இணைத்து, ஒரே இடத்தில் பார்க்கமுடியும். இதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தமுடியும் என்கிறது ஆந்திர அரசு. 4000 அரசு பள்ளிகளில் எண்ணிம வகுப்பறைகள் அமைப்பதும், 6 ஆயிரம் தொடக்க சுகாதார மையங்களில் தொலைமருந்துச் சேவையை கொண்டுவருவதிலும் இந்தத் திட்டம் உதவியாக இருக்கப்போகிறது. கற்றல் வகுப்புகள் கட்டமைக்கப்பட்டு, இதன் மூலம் 4 ஆயிரத்து 678 அரசு உயர்நிலைப்பள்ளிகள் பயன்படும் என்றும் ஆந்திர அரசு அதிகாரிகள் பெறுமையாக பேசுகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,652
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



