Show all

இந்தியாவில் தமிழ் நாடு- முதல் ஐந்தில் ஒன்று! 192 நாடுகள் பட்டியலில் இந்தியா 58வது இடத்தில்; சமத்துவம் மற்றும் வறுமை ஒழிப்பில்

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐக்கிய நாடுகள் அவை மற்றும் நிதி ஆயோக் என அழைக்கப்படும் திட்டக்குழு இரண்டும் இணைந்து வறுமை ஒழிப்பு, சமத்துவத்தை மேம்படுத்துவதில் நீடித்த வளர்ச்சியை அடைந்த மாநிலங்கள் எவை என்ற பட்டியலை வெளியிட்டன.

வறுமை ஒழிப்பு, சமத்துவத்தை மேம்படுத்துவதில் நீடித்த வளர்ச்சியை அடைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ் நாடு, இமாசல பிரதேசம், கேரளா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் முதல் ஐந்து இடம்பெற்றுள்ளன.

சர்வதேச அளவில் வறுமை ஒழிப்பு, சமத்துவத்தை நிலை நாட்டும் 192 நாடுகள் பட்டியலில் இந்தியா 58 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தக் குறியீடானது சுகாதாரம், பாலின சமன்பாடு, சுத்தமான ஆற்றல், கட்டுமானம், கல்வி, அமைதி என 17 பிரிவுகளில் மாநிலங்கள் அளிக்கும் முன்னுரிமை மற்றும் பெற்ற வளர்ச்சியைப் பொருத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் வறுமையைக் குறைத்து, சமத்துவத்தை நிலைநாட்டுவதில் ஆந்திர பிரதேசம், கோவா, குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

நீடித்த வளர்ச்சி வழங்குவதில் தமிழ்நாடு, இமாசல பிரதேசம், கேரளா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலை வகிக்கும் நிலையில், அசாம், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மோசமாக செயல்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினைந்து ஆண்டு திட்டத்தில், ஐக்கிய நாடுகள் அவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  கொண்டு வந்துள்ள இலக்குகளை இந்தியா இன்னும் 12 ஆண்டுகளுக்குள் அடைய வேண்டும் என இலக்கு நிர்ணைக்கப்பட்டுள்ளது.

உலகின் மக்கள் தொகையில், இந்தியாவில் 17 விழுக்காட்டினரும், சீனாவில் 18.54 விழுக்;காட்டினரும் உள்ளனர். இவ்வளவு மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் வறுமை ஒழிப்பு மற்றும் சமத்துவத்தை நிலை நாட்டுவது என்பது வேகமான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினால் மட்டுமே முடியும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,012.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.