14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆயுத போராட்டமாக முன்னெடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவர், 73 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் 48-ஆவது அகவையில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனாலும், இவருடைய மரணம் குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதற்கிடையே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை, சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஸ்டாலினால் சிறையில் வைத்து கொல்லப்பட்டார். இந்தத் தகவல் முன்னாள் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேருவுக்கும் தெரியும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என பரப்பட்ட தகவல் நேரு மற்றும் ஜப்பானின் கூட்டு சதித்திட்டம் ஆகும். அப்போதயை சோவியத் யூனியனில் தங்குவதற்கு இடம் தேடிய நேதாஜிக்கு சர்வாதிகாரி ஸ்டாலின் தஞ்சமடைய அனுமதியளித்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஸ்டாலின் உத்தரவால் கொல்லப்பட்டார். இதைப் பற்றிய அனைத்து விவரங்களும் முன்னாள் தலைமை அமைச்சர் நேருவுக்கு தெரியும். 75 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதால் தான் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் விடுதலை வழங்க முதன்மைக் காரணம். காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் ஆயுதம் ஏந்தினால் அதை பிரிட்டன் அரசால் சமாளிக்க முடியாது, ஏனெனில் இந்தியர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது பிரிட்டிஷ்காரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனாலேயே நமக்கு விடுதலை வழங்கப்பட்டது. இந்தத் தகவலை பிரிட்டன் முன்னாள் தலைமை அமைச்சர் க்ளீமண்ட் அட்லீஸ், இந்திய விடுதலைக்குப் பிந்தைய அடுத்த ஆண்டு இந்தியா வந்த போது அவரே ஒப்புக்கொண்டுள்ளார். என்று சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசாமி தெரிவிக்கும் எந்தக் கருத்திலும் ஒரு உள்குத்து இருக்கும். அது அவர் சார்ந்திருக்கிற ஹிந்து ராஷ்டிர அமைப்புக்கு ஏதோ ஒருவகையில் சாதகத் தன்மை உடையதாக இருக்கும். அதனாலேயே அவரின் பேச்சுக்கு நகைச்சுவை தன்மையை ஏற்றி தப்பிக்க விட்டு விடுவது, இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,926.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



