29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருப்பிடச் சான்று தொடர்பான ஒரு வழக்கு, மேகாலயா உயர் அறங்கூற்றுமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த அறங்கூற்றுவர் எஸ்.ஆர். சென், 'இந்திய விடுதலையின் போது, பாகிஸ்தான் எவ்வாறு தம்மை முஸ்லீம் நாடாக அறிவித்துக் கொண்டதோ, அதேபோல் இந்தியாவும் ஹிந்து தேசமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்' என எஸ்.ஆர்.சென் தெரிவித்தார். இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் வெளிப்படுத்தப் பட்டு வருகின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,002.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



