Show all

சர்தார் வல்லபாய் படேல் சிலை சீனாவின் கெத்து! இந்தியா வெத்துவேட்டா?

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று திறக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் யாருக்குப் பெருமை தெரியுமா? இதுவரை சீனாவின் புத்தர் சிலையே, உலகின் உயரமான சிலையாக இருந்தது. 128 மீட்டர் சிலையின் உயரம் மட்டும்.

இனிமேல் சீனாவால் உருவாக்கப் பட்ட படேல் சிலை உலகில் உயரமான சிலை என்று போற்றிக் கொள்ளப் படும். இந்தியாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலை கண்ட சீனா என்று இனி சீனாவின் பெருமையை வரலாறு பேசும். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்றெல்லாம் தமிழர் பெருமை வரலாற்றில் நிற்கிறது இல்லையா அதைப் போல. 

சர்தார் வல்லபாய் படேல் சிலையை இந்தியர்கள் உருவாக்கவில்லை. இந்தச் சிலையை உருவாக்கும் பணியில் 700க்கு மேற்பட்ட சீனர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பில் பெரும் பங்கு சீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிலை வடிப்பாளர் ராம் வி.சுந்தர், படேலின் சிலையின் அச்சு மாதிரிகளை மட்டுமே உருவாக்கி கொடுத்துள்ளார். சிலையை சீன தொழில்நுட்பங் கொண்டே உருவாக்கியுள்ளனர்.

சீனர்களை பயன்படுத்தியதால், இந்திய கட்டிடக் கலைஞர்களின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. படேல் சிலையால் இந்திய கட்டிடக்கலைஞர்களுக்கு எந்த பெருமையும் இல்லை.

இந்தியாவின் பொருளாதாரம் கவலைக்கிடமாக உள்ள நிலையில், இவ்வளவு பொருட்செலவில் சீனாவுக்கு பெருமை சேர்க்கும் சர்தார் வல்லபாய் படேல் சிலை தேவைதானா? 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,957.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.