ரூ.200 தாள்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 தாள்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.1000 தாள்கள் திரும்பப் பெறப்பட்டதால், அதனை ஈடு செய்யும் வகையில்; ரூ.2000 தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. ரூபாய்தாள் திரும்பப் பெறல் நடவடிக்கையில் தட்டுப்பாட்டை போக்குவதற்காக அவசர அவசரமாக இவை அச்சிடப்பட்டதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் புள்ளி விபர கணக்கின்படி, சூலை 14 வரை ரூ1,52,20,00,00,000 அளலான பணம் புழக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரூ.200 தாள்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு நூறு கோடி ரூ.200 தாள்கள் அச்சிடப்பட்டு வருகிறது. ரூ.2000 தாள்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.500 தாள்கள் அதிகம் அச்சிடப்பட்டு வருகின்றன. கடந்த 40 நாட்களாக ரூ.500 தாள்களை ரிசர்வ் வங்கி அதிகம் புழக்கத்தில் விட்டு வருவதாக இந்திய மாநில வங்கி தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



