Show all

இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், வரும் ஆண்டுகளில் காப்பீட்டு கட்டணத்தை அதிகமாக செலுத்த வேண்டுமாம்!

புதிய ஊர்திகள்சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்தே கடுமையான விதிமுறைகள் அபராதம் என வசூல் வேட்டை நடந்தாலும், விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்கிறார்களா என்றால் இல்லையென்பதே விடையாகக் கிடைக்கிறது. எனவே இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், வரும் ஆண்டுகளில் காப்பீட்டு கட்டணத்தை அதிகமாக செலுத்த வேண்டும் என்கிற புதிய அபராதமும் அமலுக்கு வருகிறதாம்.
 
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதிய ஊர்திகள்சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்தே கடுமையான விதிமுறைகள் அபராதம் என வசூல் வேட்டை நடந்தாலும், விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்கிறார்களா என்றால் இல்லையென்பதே விடையாகக் கிடைக்கிறது.

இன்றளவிலும் ஒவ்வொரு 10 நிமிடத்திலும், 9 விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம். ஆக எவ்வளவு தான் ஓட்டுனர்கள் மீது விதிமுறைகளை திணித்தாலும், கட்டணங்களை அதிகரித்தாலும் விபத்துகள் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறதாம். 

ஆக இதைத் தடுக்க அரசு தற்போது இன்னுமொரு புதிய வகை அபராதத்தை கையில் எடுத்துள்ளது. இதுவரை போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதத்திற்காக மட்டும் பயந்து கொண்டிருந்த, வாகன ஓட்டிகள் இனி இன்னொரு அபராதத்திற்காகவும் கவலை பட வேண்டியிருக்கும்.

அது ஒவ்வொரு முறையும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போதும், வாகன காப்பீட்டுக்கான தொகையை உயர்த்துவது என்பதே.

ஹெச்.டி.எப்.சி எர்கோ பொதுக் காப்பீடு நிறுவனத்தின் தலைமை செயல் மற்றும் தலைமை எழுத்துறுதி அலுவலர் அனுராக் ரஸ்தோகி தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழு, போக்குவரத்து விதிமுறை மீறல்களை, காப்பீடு கட்டணச் செலவுகளுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் போக்குவரத்து விதிமீறல்களுடன் காப்பீட்டு கட்டணச் செலவை இணைப்பது, விபத்துகளைக் குறைக்கும் என்றும், மேலும் இது ஓட்டுனர் நடத்தையில் மாற்றத்தை கொண்டு வரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்காக காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் போக்குவரத்து விதிமுறைகளுடன் காப்பீட்டு செலவை இணைக்கும் முறையை ஆராய ஒரு பணிக்குழுவையும் நியமித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து கொள்கை சந்தை. வணிகத்தின், தலைமை வாகனக் காப்பீட்டுத் தலைவர் சஜ்ஜா பிரவீன் சவுத்ரி கூறுகையில், பொது இடங்களில் இருக்கும் போது மக்கள் அதிக பொறுப்புள்ளவர்களாக இருக்க ஒட்டுமொத்த சூழல் மாற்றப்பட்டு வருகிறது. எனவே நல்ல ஓட்டுனர்கள் நிச்சயமாக குறைந்த காப்பீட்டு கட்டணத்தைச் செலுத்துவார்கள். இதே மோசமான ஓட்டுனர்கள் அதிக காப்பீட்டு கட்டணத்தை செலுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

தற்போது வாகனக் காப்பீட்டு கட்டணங்கள் முதன்மையாக காப்பீட்டு நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால் இனி அவரவர் ஓட்டுனர் நடத்தையை பொறுத்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் காப்பீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒரு மென்மையான மற்றும் குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும் கொள்முதல் செயல்முறையை வழங்க எதிர்பார்க்கின்றனர்.

‘ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்’ என்று ஒரு தமிழ்ச் சொலவடை உண்டு. போக்குவரத்தை சரியாக கட்டமைக்காமல் சாலையில் பயணிக்கிறவனை குற்றவாளியாக்க முயன்றால் தீர்வுக்கு வாய்ப்பேயில்லை என்பதுதான் உண்மை. 

ஓட்டுநர் உரிமம் இல்லாது வாகனம் ஓட்டுகிற தப்பித்தல் (விதிமுறைமீறல்) ஏன் நிகழுகிறது. வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொண்டால், ஓட்டத் தெரிந்தால் ஓட்டுநர் உரிமம் கிடைக்குமா என்றால் வாய்ப்பில்லை. ஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்சம் 4000 ரூபாய் வேண்டும். 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் விதிமுறை மீறலுக்கு சாராயம் வணிகம் செய்யும் அரசுதான் காரணமாகிறது.

காப்பீடு செலுத்தாமல் ஓர் ஆண்டு முழுவதும் வண்டியோட்டி தப்பித்து விட்டால் குறைந்தது ஒரு 1500 ரூபாய் மிச்சமாகிறது. 

தலைக்கவசம் வாங்க குறைந்தது 1000 ரூபாய் மிச்சமாகிறது. 

சென்னையிலிருந்து சேலம் செல்ல 500க்கு குறையாமல் சுங்க வரி செலுத்த வேண்டும். 

இப்படி அரசின் எல்லாக் கட்டுமானங்களும் இடைத்தரகர்கள் செலவுகள் என்று இருந்தால், அதையெல்;லாம் கட்டி விட்டு அபராதத்தை தவிர்க்க முயல்வார்களா? அந்தச் செலவுகளையெல்லாம் தவிர்த்து அபராதத்தையும் தவிர்க்க முயல்வார்களா? அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அபராதத்தில் சிக்கினவன் செத்தான் என்றாலும் கூட, சிக்கினவன்தானே செத்தான் என்று பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.

திருமணம், குடும்பம் உலகினருக்கு தமிழர் தந்த கொடை. ஒருவேளை- திருமணமும், குடும்பமும் இல்லாமல் இருக்கும் சமுதாயத்தை நினைத்துப் பார்ப்போம். 

உணவை மட்டுமே சார்ந்திருக்கிற மிருகங்களிலேயே பாலியல் வன்முறை மிகுதி. உணவு, பணம், வசதிகள் என்று வாழ்க்கையை முன்னெடுக்கிற மனித சமுதாயத்தில் பெண்களின் பாதுகாப்பு 100விழுக்காடு கேள்விக் குறியாகும் அவலங்கள் அல்லவா அரங்கேறும். இங்கே அபராத நடைமுறைகளை அமல்படுத்தி எதாவது சாதிக்க முடியுமா? அதிகாரிகள், அரசியல்வாதிகள், அறங்கூற்றுமன்றங்கள் யாரை யார் தட்டிக் கேட்க முடியும்?

தேவை- ஒவ்வொரு துறையிலும் தமிழர் கண்டுபிடிப்புகளான திருமணம், குடும்பம் போன்றவைகளான கட்டுமானங்களேயன்றி அபராதங்கள் அல்ல. இடைத்தரகர்களையும், அதிகாரிகளையும் வைத்து அபராதங்களை அதிகரிக்க அதிகரிக்க குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகும்.

‘அம்மா! அண்ணன் அடிச்சிட்டான்’
தாயின் தண்டனை நிறைவேற்றம்;
அண்ணனுக்கு இரண்டு அடிகள். குற்றம் செய்யாமல் தாய் கொடுத்த தண்டனையை சீரனித்துக் கொள்ள முடியவில்லை.
தந்தை வந்ததும் தொடர்கிறது மேல்முறையீடு.
தம்பியின் பொய்க்குற்றச்சாட்டு அம்பலமாகிறது. அண்ணனை தாய் அரவணனக்கிறாள். பரிசுப் பொருள்களோடு தந்தையின் சமாதானம். இது தமிழ்க் குடும்ப ஐயாயிர ஆண்டுகால பழமையின் வெளிப்பாடு.
இன்றைய அயலியல் சட்டசமுக அமைப்பின் சாராய வணிகம் வரி வட்டி இவைகளே குற்றங்களுக்கும் காரணமும் ஆகி-
மேல்முறையீட்டில் பொய் வழக்கு புலப்பட்டாலும் பாதிக்கப் பட்டவனுக்கு இழப்பீடு ஏதும் இல்லை. சீர் செய்ய-
தமிழ்ச் சான்றோர்கள் எழவேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,281.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.