Show all

மோடிஐயா! வெளிநாட்டுப் பயணம் வெளிநாட்டுப் பயணம் என்று மக்கள் வரிப்பணத்தை வீணடித்தது இதற்காகத்தானா?

07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் ஒப்பந்தம் செய்வதற்காக தலைமைஅமைச்சர் மோடியுடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானியும் கமுக்கமாக பிரான்ஸ் சென்றது அம்பலமாகி உள்ளது.

இந்தியாவில் பாஜக செய்த மிகப்பெரிய ஊழலாக ரபேல் ஊழல் உருவெடுக்கும் நிலையை எட்டியுள்ளது. ஆம், இதில் கிட்டத்தட்ட பாஜகவிற்கு எதிரான சாட்சியங்கள் எல்லாம் தயாராகிவிட்டன என்று கூட கூறலாம். இதுவரை இந்தியாவில் நடந்த ஊழல்கள் எல்லாம் அதிகபட்சம் இந்தியாவிற்குள்ளாகவே இருந்தது. ஆனால் ரபேல் ஊழல் பிரான்ஸ் வரை சென்று சேர்ந்து இருக்கிறது.

இதன் காரணமாக அகண்ட பாரத கனவு பாஜக, அகில உலக பாஜகவாக தலைப்பாகியுள்ளது. ரபேல் விமானம் வாங்கியதில் மொத்தமாக ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.

காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த இறுதி விலையை விட அதிக விலையில் விமானங்கள் வாங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பாஜக மறைமுகமாக ஆதாயம் அடைந்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்தது.

இந்த நிலையில்தான் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே (மோடியுடன் இவரது தலைமையிலான அப்போதைய அரசுதான் ரபேல் ஒப்பந்தம் செய்தது) ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார். முதலில் காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ பங்குதாரர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகள் நிறுவனம்தான் (அரசின் பொதுத்துறை நிறுவனம்). ஆனால் மோடி தலைமையிலான அரசு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்துக் கொள்ள கூறியது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய பிரான்ஸின் அப்போதைய அதிபர் ஹாலண்டே இந்திய வருகிறார். அதன்பின் ஒப்பந்தம் குறித்த முடிவுகள் கையெழுத்து ஆகிறது (அப்போது வரை ஹிந்துஸ்தான் நிறுவனம் நீக்கப்படவில்லை). ஆனால் மீண்டும் தலைமை அமைச்சர் மோடி பிரான்ஸ் செல்கிறார். அப்போதுதான் ஒப்பந்தத்தில் இருந்து ஹிந்துஸ்தான் நிறுவனம் நீக்கப்பட்டு, ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ பங்குதாரராக நியமிக்கப்படுகிறது.

இதில் முதன்மையாக கவனிக்கவேண்டிய தகவல் என்னவென்றால் பிரான்ஸ் நாட்டிற்கு இந்தியத் தலைமை அமைச்சர் மோடி சென்று ஹாலண்டேவை சந்தித்த போது அவருடன் அனில் அம்பானியும் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதை பாஜக மறைத்து இருக்கிறது. அதாவது பிரான்ஸ் அதிபர்-மோடி பேச்சுவார்த்தை நடத்திய போது அங்கு அனில் அம்பானியும் இருந்தார் என்று கூறப்படுகிறது. இதை பாஜக மறைத்தும் இருக்கிறது.

இந்த நிலையில்தான் தற்போது பிரான்ஸ் அரசின் அப்போதைய சந்திப்பு விவரங்கள் முன்னாள் அதிபர் ஹாலண்டே மூலம் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த சந்திப்பில் அனில் அம்பானி கலந்து கொண்டார், அதன் விவரம் இதோ என்று அப்போது கலந்து கொண்டவர்கள் பெயரை வெளியிட்டு இருக்கிறது. 

ஆனால் இந்தியா வெளியிட்ட நிகழ்ச்சி நிரலில் அம்பானி பெயர் தொலைப்பு. இது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விசயத்தை காங்கிரஸ் கட்சி பெரிய பிரச்சனையாக மாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒருவேளை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய அந்த ராணுவ ரகசியம் இதுதான் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,919.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.