Show all

பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்க தவறிய மோடி செயலி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ செயலியான நரேந்திர மோடி ஆப் பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்க தவறி விட்டது என மும்பை டெவலப்பர் ஜாவேத் காத்ரி என்பவர் குற்றம் சாட்டிள்ளார். அதன் படி நரேந்திர மோடி செயலியைத் தங்களின் சீர்மிகுசெல்பேசியில் தரவிறக்கம்;; செய்திருக்கும் பல லட்சம் பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் அளவு திறன் வாய்ந்ததாக இல்லை என காத்ரி தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி செயலி சரியான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என்ற தகவலை செயலி வடிவமைப்பாளர்களுக்குத் தெரிவிக்க முயன்ற காத்ரி, வடிவமைப்பாளர்களைத் தொடர்பு கொள்ள இயலாத சூழ்நிலையில் செயலி பிழையினைத் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார். நரேந்திர மோடி செயலியை ஊடுருவியதல் செய்து இந்த பிழையைக் கண்டறிந்த காத்ரி, செயலியின் பிழையை மட்டும் எடுத்துக் காட்ட விரும்பியதாக தெரிவித்திருக்கிறார். பயனர்களின் தகவல்கள் இணையத்தில் சேமிக்கப்பட்டிருப்பதால் இணைய இணைப்பு கொண்ட யார் வேண்டுமானாலும் பயனர்களின் தகவல்களை எளிமையாக பார்க்க முடியும் என காத்ரி எச்சரித்திருக்கிறார். தான் ஊடுருவல் செய்த வழிமுறையை தெரிவித்தால் பயனர் தகவல்கள் ஊடுருவல் செய்து திருடப்படலாம் என்பதால் அதனைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.