Show all

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடி அரசிடம் மாற்றம்

ரூபாய் நோட்டுக்குத் தடைவிதித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் முடிவு குறித்து மக்கள் தங்கள் கருத்தை நேரடியாக பிரதமரிடம் தெரிவிக்க - கருப்புப்பணம் மற்றும் ஊழலை ஒழிக்க நடுவண் அரசு எடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று தலைப்பிட்டு, பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தார். பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய பணம் கிடைக்காமல் பொதுமக்கள் பலர் இறந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடுவண் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் போதிய முன் ஏற்பாடுகள் இல்லாமல், முறையாக அமல்படுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கி வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், பிரதமரின் ரூபாய் நோட்டு தடை முடிவு, பாகிஸ்தான் நடத்திய உரி தாக்குதலுக்கு நிகராகனது என்று சாடியுள்ளார். இவ்வாறு, பல்வேறு எதிர்ப்புக்குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், தொடக்கத்தில், யோசிக்காமல் மோடியின் வார்த்தை ஜாலத்தை நம்பி அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்த சாமானிய மக்கள் - முன்னேற்பாடு இல்லாத, பொறுப்பற்ற, வழக்கமான மெத்தன அரசு நடவடிக்கைகள் பேன்றதான செயல்பாட்டால் - அரசை கண்டிக்கத் தொடங்கியுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிய வண்ணமாய் உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் நோட்டு தடை குறித்த பொதுமக்களின் நேரடிக் கருத்துக்களை, பிரதமரின் பெயரில் உள்ள மொபைல் அப்ளிகேஷன் மூலம் மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று தன் சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.