Show all

மோடியின் அமைச்சரவை விரிவாக்கம்: நல்லவேளை! புதிதாக தமிழர் யாரும் உள்ளே வரவில்லை

மோடியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. 9 புதிய அமைச்சர்கள்; பதவி பெறுகிறார்கள். நல்லவேளை! புதிதாக தமிழர் யாரும் உள்ளே வரவில்லை. தமிழர்கள் தாம் உச்சம் தொடுபவர்கள் ஆயிற்றே. சொந்தக் காலில் நின்றால் உலகமே வியக்க சாதிப்பான்; அடிமையாக இயங்கினால் நாயை விட கேவலமாக தன் இனத்தையே கடித்துக் குதறுவானே. பாஜகவில் இருக்கிற தமிழ்அடிமைகள் போதாதா?

நடுவண் அமைச்சரவையில் புதிதாக இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் 1.அஸ்வின் குமார் சௌபே 2.சத்யபால் சிங் 3.ஷிவ் பிரதாப் சுக்லா 4.ராஜ்குமார் சிங் 5.வீரேந்திர குமார் 6.ஹர்தீப் சிங் புரி 7.கஜேந்திர சிங் ஷெகவாத் 8.அனந்தகுமார் 9.அல்போன்ஸ் ஆகியோர்

அஸ்வின் குமார் சௌபே- பீகார் மாநில பக்ஸார் பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினராவார். பாஜகவை சேர்ந்த இவர் பீகார் மாநிலத்தின் முன்னாள் நலவாழ்வுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.

சத்யபால் சிங்- இவர் மும்பை மாநகர முன்னாள் காவல் துறை ஆணையராக இருந்தவர். உத்தரப்பிரதேச மாநிலம் பகத்பட பாராளுமன்ற தொகுதியை சேர்ந்தவர். இவர் பாஜகவை சேர்ந்தவர்.

ஷிவ் பிரதாப் சுக்லா- உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் மேலவை உறுப்பினராக உள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு பாஜகவின் துணை தலைவராக இருந்தவர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சராகவும் இருந்தார். ராஜ்குமார் சிங்- பீகாரை சேர்ந்தவர் முன்னாள் ஆட்சிப் பணித் துறை அதிகாரியான இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த 1990-இல் இவர் சமஸ்திபூர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது, அயோத்தியில் இருந்து குஜராத் மாநிலம் சோம்நாத்துக்கு யாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை கைது செய்தவர். இந்த கைதானது அப்போதைய லாலு பிரசாத் ஆட்சியின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. கடந்த 2013-இல் ஆர்கே சிங் பாஜகவில் இணைந்தார். பின்னர் ஆரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வீரேந்திர குமார்- மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் 11,12, 13, 14-ஆவது பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் 1996-2009 வரை ம.பி.யின் சாகர் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். தற்போது 15 மற்றும் 16-ஆவது பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். தற்போது திகம்கார் தொகுதியின் பாஜக உறுப்பினராவார். தொழில் துறையின் நிலைக்குழுவின் தலைவராவார்.

ஹர்தீப் சிங் புரி- பஞ்சாபை சேர்ந்த இவர் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாவார். இந்திய வனப்பணித் துறை முடித்துள்ளார். இவர் கடந்த 2009-2013 வரை ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக இருந்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலின் பயங்கரவாத தடுப்பு குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். சர்வதேச அமைதி நிறுவனத்தின் துணை தலைவராகவும் இருந்துள்ளார். கஜேந்திர சிங் ஷெகவாத்- ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது ஜோத்பூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பாஜக விவசாய அணியின் தேசிய பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

அனந்தகுமார் ஹெட்ஜே- இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் உத்தர கன்னடா தொகுதியின் உறுப்பினராவார். இவர் கடந்த ஜனவரி 2அன்று 3 மருத்துவர்களை பொதுமக்கள் மத்தியில் அடித்தது கண்காணிப்பு கருவியில் பதிவாகியிருந்தது. எனினும் மருத்துவர்கள் இவர் மீது புகார் அளிக்கவில்லை.

  • பிரச்சனையிலும் கருநாடகவுக்கு ஆதரவான பயங்கரவாதி தேவை என்பதற்காக பதவி கொடுத்திருக்கிறார்களோ என்னவோ.

அல்போன்ஸ்- இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஓய்வுபெற்ற ஆட்சிப்பணித் துறை அதிகாரியாவார். கடந்த 2011-இல் பாஜகவில் இணைந்த இவர் கன்ஜிராப்பள்ளி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர். இவர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.