மகாத்மா காந்தியை
விட பிரதமர் மோடி தான் மிகப் பெரிய புகழைப் பெற்றவர் என அரியானா அமைச்சரும், பா.ஜ.,
தலைவருமான அனில் விஜ் தெரிவித்துள்ளார். காதி நிறுவன நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பில்
காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருப்பது கடும் விமர்சனத்திற்கு
உள்ளாகி உள்ளது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள
அரியானா அமைச்சர் அனில் விஜ், ‘மகாத்மா காந்தியின் பெயரால் விற்பனை செய்யப்பட்டதால்
தான் இதுவரை காதி பொருட்கள் சரிவர விற்பனையாகவில்லை. 2017 நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பில்
மோடியின் படம் இடம் பெற்றிருப்பது நல்ல விசயம். காந்தியை விட மோடி புகழ்பெற்று, பிரபலமானவர்’
என தெரிவித்துள்ளார். மேலும் காதி பொருட்களை பயன்படுத்துமாறு மோடி விளம்பரப்படுத்தியதற்குப்
பிறகு காதி பொருட்களின் விற்பனை 14விழுக்காடு
அதிகரித்துள்ளது. ரூபாய் தாள்களில் காந்தியின் படம் அச்சிடப்பட்டது முதல் அவைகள்
மதிப்பிழந்து உள்ளன. நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பில் இருந்து காந்தியின் படம் நீக்கப்பட்டதை
போன்று, ரூபாய் தாள்களில் இருந்தும் காந்தியின் படம் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



