27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விடுதலைக்குப் பின்னர் கர்நாடகம் அத்துமீறி அணைகளைக் கட்டிக் கொண்டு தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தரக்கூடாது என்கிற ஆணவமும், அடாவடியும், எல்லை மீறும் போதெல்லாம் இயற்கை அன்னை எல்லையில்லா மழையை பொழிந்து அவர்களை அணையை திறக்க வேண்டிய கட்டயத்தை உருவாக்கியிருக்கிறாள். அதுவே இந்த முறையும் நடந்திருக்கிறது. அறங்கூற்றுமன்றம், காவிரிமேலாண்மை வாரியம், நடுவண் அரசு அனைவருக்கும் அடாவடி காட்டிய குமாரசாமியை -இயற்கை மண்டையில் தட்டி கதவை திறந்து காவிரியை வெளிவிடு என்று ஆணையிட்டிருக்கிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு 38,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர், மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. நேற்று நீரின் அளவு 37,000 கனஅடியானது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அங்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணையின் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதத்திற்கான நீரை உடனே திறக்க கர்நாடக குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக காவிரி நீரின் அளவு விநாடிக்கு 35,000 கனஅடியில் இருந்து 38,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மேட்டூர் அணையை நிரப்புவாள் இயற்கை அன்னை! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,845.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



