Show all

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் நரேந்திரமோடியாம்! ஆசிரியரிடம் விவாதித்த ஆறாம் வகுப்பு மாணவன்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நரேந்திர மோடியா? ஜெயசங்கரா? குழப்பத்தில் மாணவன். குழப்பத்தை தெளிவாக்க முடியாத தடுமாற்றத்தில் ஆசிரியர்.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் தொடங்கி விட்ட நிலையில், இன்னும் பாடங்கள் வேகவேகமாக நடத்தத் தொடங்காத நிலையில். பொது அறிவு அலசல் போக்கில், ஒரு பள்ளியின் ஆறாம் வகுப்பில் நடந்த விவாதம்: இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நரேந்திர மோடியா? ஜெயசங்கரா? என்பதுதான். 

பள்ளியின் வழிபாட்டு அணிவகுப்பில் வழக்கம் போல் ஒரு மாணவன் செய்திதாள் வாசித்தான். அவன் வாசித்த செய்தி:  இன்று நரேந்திர மோடி கிர்கிஸ்தான் பயணம். சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், மாநாட்டில் பங்கேற்க இன்று கிர்கிஸ்தான் செல்கிறார் நரேந்திர மோடி. 

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான, கிர்கிஸ்தானின் தலைநகர், பிஷ்கெக் நகரில், சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், ஆண்டு மாநாடு, நாளையும்  நாளை மறுநாளும் நடக்க உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பு நாடாக இந்தியா உள்ளது. இதில், நரேந்திர மோடி பங்கேற்க, இன்று டில்லியிலிருந்து பிஷ்கெக் நகருக்கு செல்கிறார். 

பள்ளியின் வழிபாட்டு அணிவகுப்பு முடிந்து, வகுப்புக்குள் நுழைந்து விட்ட ஒரு பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர்களிடையே, இந்தச் செய்தி விவாதப் பொருளானது. ஒரு மாணவன் முன் வைத்த கேள்வி. ஓயாமல் ஒலகஞ் சுற்றிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடிதான் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்க வேண்டும். அப்படியிருக்கும் போது, நமது வரலாற்று ஆசிரியர் நேற்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் என்று சொன்னாரே, என்று ஒரு போடு போட்டான்.

கடந்த முறை ஆட்சியின் போது அதிக உலக நாடுகள் சுற்றியது மோடிதான் என்கிற செய்தியெல்லாம் விவாதிக்கப் பட்டு விவாதம் சூடாகி வரும் வேளையில், முதல் பிரிவேளையின் ஆங்கில ஆசிரியர் உள்ளே நுழைந்தார். மாணவர்களின் விவாதம் குறித்து கேட்டவர், அவரே குழம்பிப் போனார். வெளியுறவுத் துறை அமைச்சர் நரேந்திர மோடியா? ஜெயசங்கரா? என்று.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,181.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.