நான்கு நாள் பயணமாக இந்திய ராணுவத் தளபதி இலங்கை செல்கிறார். அப்போது இருநாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு குறித்து அவர் ஆலோசிக்கிறார். இந்தியா - இலங்கை இடையேயான பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்வதற்காக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் இன்று (திங்கட்கிழமை) 4 நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு செல்கிறார். இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்திய ராணுவ தளபதியின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளில் இலங்கை முக்கியமான அண்டை நாடாக விளங்குகிறது. பாதுகாப்பில் இணைந்து செயலாற்றுவது இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பாகும். மேலும், பல்வேறு நிலைகளில் செய்யப்படும் தகவல் பரிமாற்றங்கள், ராணுவ ரீதியிலான ஒத்துழைப்புகள் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தி உள்ளன. இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே வீரர்களுக்கான பயிற்சி, அதிகாரிகள் மட்டத்திலான ஒத்துழைப்பு, கடல் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார். மேலும் ராணுவ பயிற்சி மையங்களையும் அவர் பார்வையிடுகிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



