இதுகுறித்து ‘நியூ
வேர்ல்டு வெல்த்’ எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியாவிலுள்ள
மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.360 லட்சம் கோடி. இந்தியாவில்
2,64,000 கோடீஸ்வரர்கள் உள்ளனர். 95 மிகப்பெரும்
கோடீஸ்வரர்கள் உள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 46 ஆயிரம் கோடீஸ்வரர்களும்,
28 மிகப்பெரும் கோடீஸ்வரர்களும் இருக்கின்றனர். மும்பையில் மொத்தம் 54.64 லட்சம் கோடி
மதிப்புச் சொத்துகள் உள்ளன. மும்பைக்கு அடுத்து
தில்லி, பெங்களூரு நகரங்கள் 2 மற்றும் 3-ஆவது இடத்தில் உள்ளன. தில்லியில் 23,000 கோடீஸ்வரர்களும்,
18 பெரும் கோடீஸ்வரர்களும் இருக்கின்றனர். தில்லியில் மொத்தம் ரூ.29.98 லட்சம் கோடி
மதிப்புச் சொத்துகள் உள்ளன. பெங்களூரில் 7,700 கோடீஸ்வரர்களும், 8 மிகப்பெரும் கோடீஸ்வரர்களும்
வசிக்கின்றனர். பெங்களூரில் ரூ.21.32 லட்சம் கோடி மதிப்பு சொத்துகள் இருக்கின்றன. ஹைதராபாதில் ரூ.20.65 லட்சம் கோடி மதிப்புச் சொத்துகள் உள்ளன. அங்கு 9,000 கோடீஸ்வரர்களும்,
6 மிகப்பெரும் கோடீஸ்வரர்களும் வசிக்கின்றனர். கொல்கத்தாவில் 9,600 கோடீஸ்வரர்கள், 4 மிகப்பெரும்
கோடீஸ்வரர்கள் உள்ளனர். கொல்கத்தாவில் ரூ.19.32 லட்சம் கோடி மதிப்பு சொத்துகள் உள்ளன.
புணேயில் 4,500 கோடீஸ்வரர்களும், 5 பெரும் கோடீஸ்வரர்களும்
வாழ்கின்றனர். அந்நகரில் ரூ.11.99 லட்சம் கோடி மதிப்புக்கு சொத்துகள் உள்ளன. சென்னையில் 6,600 கோடீஸ்வரர்களும், 4 மிகப்பெரும்
கோடீஸ்வரர்களும் உள்ளனர். சென்னையில் இருக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.
9.99 லட்சம் கோடி ஆகும். சொத்து எவ்வளவு இருக்குனு சொல்லிட்டிங்க. சொத்தை
யாரெல்லாம் வச்சிருக்காங்;கனு சொல்லலையே?
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



