Show all

பாஜகவுக்கே வாக்களித்து ஆட்சியில் அமர்த்துவீர்களேயானால், தேசத்துரோகச் சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்: ராஜ்நாத்சிங்

இந்த முறையும் பாஜகவுக்கே வாக்களித்து ஆட்சியில் அமர்த்துவீர்களேயானால், தேசத்துரோக சட்டத்தை இன்னும் கடுமையாக்குவோம் என்று நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
 01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குஜராத் மாநிலம் கட்ச்  மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரில்  நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 
தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பவர்களை நாம் மன்னித்து விட வேண்டுமா? இந்த முறையும் பாஜகவுக்கே வாக்களித்து ஆட்சியில் அமர்த்துவீர்களேயானால், தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனியாக தலைமைஅமைச்சரை நியமிக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால்- (தனிநாடாக இருந்து வந்த ஜம்மு-காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைப்பதற்காக அரசமைப்புச் சட்டப் பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை உருவாக்கி ஜம்மு-காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் தரவேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப் பட்டது) அரசமைப்புச் சட்டப் பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை திரும்பப் பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார். 
இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வருகிற சிறப்புத் தகுதி ரத்து செய்யப்படும் என்று பயந்துதானே அங்கேயிருப்பவன் தீவிரவாதத்திற்கு ஆள் திரட்டிக் கொண்டிருக்கிறான். 
இராகுல் தீவிரவாதத்திற்கு எதிரான தீர்வு என்பது அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் என்கிறார். பாஜகவினர் அதிகாரம் கேட்பவர்களை அடித்து நொறுக்குதல் என்கின்றனர். இந்த மாதிரி போக்கில் ஹிட்லர், முசோலினி  இருந்ததாலேதானே உலகம் இரண்டு உலகப் போரை சந்தித்தது. பாஜக விரும்புவது மீண்டும் அதே பாதையா? இவர்களா இந்தியாவின் காவலாளிகள். இந்தியாவை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் மனநோயாளிகள்
   -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,122.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.