Show all

ஹிந்துக்ளுக்கு மூத்த சகோதரர் போன்ற பொறுப்பு இருக்கிறது: கமல்ஹாசன்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசன் ஹிந்துக்கள் மற்றவர்களை அரவணைத்து அவர்களின் தவறுகளைத் திருத்த வேண்டும் என்று ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சில வாரங்களுக்கு முன் விகடன் வார இதழுக்கு அளித்தப் பேட்டியில், ‘ஹிந்துத் தீவிரவாதம் இல்லை என்று கூறமுடியாதுஎன்று கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்திற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடனுக்கு அளித்தப் பேட்டியில் மீண்டும் ஹிந்துக்களைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு மூத்த சகோதரர் போன்ற பொறுப்பு இருக்கிறது. எனவே அவர்கள் மற்றவர்களை அரவணைத்து, அவர்கள் தவறு செய்தால் அதைத் திருத்த வேண்டும். அவர்களைத் தண்டிக்கும் பொறுப்பு அறங்கூற்றுமன்றத்திற்கே உள்ளது. அறங்கூற்றுமன்றங்கள் அதைப் பார்த்துக்கொள்ளட்டும்,’ என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,608

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.