15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று காந்தி பிறந்த நாள். ரூபாய் தாள்களில் காந்தி சிரிக்கிறார். இன்று அரசு விடுமுறை. மற்றபடி, இந்தியாவில் தொன்னூற்று இரண்டு விழுக்காடு மக்களுக்கு பத்தாயிரத்திற்கு குறைவான வருமானம். அவர்களுக்கெல்லாம் காந்தி பிறந்த நாள் விடுமுறை உண்டு ஆனால் சம்பளம் தரமாட்டார்கள். காந்தி வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற போராடினார். வெள்ளையர்கள் கொடுத்த விடுதலையை அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இன்னும் மக்களுக்கு தரவில்லை. மக்களுக்கும் கேட்டுப் பெற வழி தெரியவில்லை. இன்று காந்தி பிறந்த நாள். ரூபாய் தாள்களில் காந்தி சிரிக்கிறார். இன்று அரசு விடுமுறை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



