500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதிய 500 ரூபாய் நோட்டு இன்னும் புழக்கத்தில் விடப்படாததாலும், சரியான முன்னேற்பாடுகள் செய்யாததாலும் பல்வேறு வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் கடந்த வியாழன் மற்றும் வௌ;ளியன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின் போது இவ்விவகாரத்தை எழுப்பிய எதிர்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கின. எனினும் மோடி அரசு ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தை திரும்ப பெற முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மக்களவை, மாநிலங்களவை பராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்கட்சிகள் ஆலோசித்தன. குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் படும் வேதனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காத மோடி அரசுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பழைய ரூபாய் நோட்டு பிரச்னையைத் தீர்க்க கோரி வரும் 23-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை அருகே தர்ணா நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



