சமையல் எரிவாயு
சிலிண்டர் எண்ணிக்கையைக் குறைக்க புது கணக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு
10 ஆக குறைக்க பொருளாதார சர்வேயில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில்
நேற்று தாக்கல் செய்த பொருளாதார சர்வே பரிந்துரையில் கூறியிருப்பதாவது: மானியங்கள் பெரும்பாலும்
வசதிப்படைத்தவர்களையே சென்றடைகின்றன. எரிவாயு மானியத்தைக் குறைக்கும் வகையில் சிலிண்டர்
எண்ணிக்கையை ஆண்டுக்கு 12ல் இருந்து 10 ஆக குறைக்க வேண்டும். முந்தைய காங்கிரஸ்
ஆட்சியின் போது சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 ஆக குறைக்கப்பட்டு பின்னர் 9
ஆக உயர்த்தப்பட்டது. இது 2014ல் 12
ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மானிய சிலிண்டர்களுக்கு 8 விழுக்காடு கலால் வரி, 5விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுவதில்லை. ஆண்டுக்கு
14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்கள் அல்லது 5 கிலோ எடையுள்ள
34 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. 2014-15 ல் சமையல்
எரிவாயு மானியம் ரூ.40,551 கோடி. ஆறு ஆண்டில்
இல்லாத அளவுக்கு பெட்ரோலிய பொருள்கள் விலை குறைந்துள்ளதால், 2015 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இது ரூ.12,092
கோடியாக குறைந்துள்ளது எனகூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர்கள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



